செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 மே 2022 (18:51 IST)

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகர் சித்தார்த்?

siddharth
நடிகர் சித்தார்த் சினிமாவில் இருந்து விலகப் போவதாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த்
 
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கான சரியான கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
சினிமாவில் இருந்து விலகி அவர் சொந்த பிசினஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்யும் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சினிமாவில் இருந்து அவர் விலக போவதாக பதிவு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது