1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (14:53 IST)

பிக்பாஸில் விக்ரமனை ஜெயிக்க வைங்க! ஓட்டு கேட்ட திருமாவளவன்!

Vikraman
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு ஓட்டு போடுமாறு திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் அசீம், ஜிபி முத்து, விக்ரமன், ஏடிகே, அசல் கோளாரு, மைனா என பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நாள்தோறும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் சீசன் முடிவை எட்டியுள்ளது.

இதில் வெல்லப்போவது அசீமா? விக்ரமனா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவருக்கும் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் ஆப் மூலம் வாக்களித்து வருகின்றனர். ஆரம்பத்தில் விக்ரமன் யாரையும் கவரவில்லை என்றாலும், தொடர்ந்து உருவகேலியை கண்டித்தது, ஆணாதிக்க தன்மையை விமர்சித்தது, மோசமான சொற்கள் பேசுவதை சுட்டிக்காட்டியது என அறவழியில் அவர் நின்ற விதம் பலரையும் ஈர்த்துள்ளது.



இந்நிலையில் இந்த வாக்கெடுப்பில் அதிக ஓட்டுகள் பெறுபவரே வெல்வார் என்னும் நிலையில் ட்விட்டரில் விக்ரமனுக்கு ஆதரவாக அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “தம்பி விக்ரமன் அவர்களை பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற செய்வோம். ஹாட்ஸ்டார் ஆப் மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்” என பதிவிட்டுள்ளார். இறுதியில் வெல்லப்போவது யார் என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K