1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Third Laddu Eater Vikram

மூன்றாவது லட்டு தின்னும் விக்ரம்

ஸ்கெட்ச் படம்
விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில், மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
 
‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது மூன்றாவதாக ஒரு ஹீரோயின் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். 
 
பா.விஜய்யுடன் ‘ஆருத்ரா’ படத்தில் நடித்த மேகாலி தான் அந்த ஹீரோயின். பெங்காலியைச் சேர்ந்த இவர், ‘ஸ்கெட்ச்’  படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். ஆனாலும், மிக முக்கியமான கேரக்டராம். கதையின் திருப்பத்துக்கே இவர்தான்  காரணமாக இருப்பாராம். 
 
மேலும், விக்ரமுடன் இணைந்தும் நடித்திருக்கிறாராம். நடிகையானபோதே விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு, அந்த ஆசை உடனே நிறைவேறியதால் மகிழ்ச்சியாம். டயலாக் டெலிவரி எப்படிப் பண்ண வேண்டும் என விக்ரம் சொல்லிக்  கொடுத்ததில், தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதக்கிறார் மேகாலி.
About Writer
Cauveri Manickam
அடுத்த கட்டுரையில்
கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தாலும் தமிழன் என்பதை நிரூபித்த நடிகர் சத்யராஜ் - வீடியோ!