ஸ்பைடர்மேன் பார்க்க வந்த ரசிகர்களை ஜனநாயகன் படம் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் ஓனர்.. ரசிகர்கள் கொந்தளிப்பு..
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் 'ஸ்பைடர்மேன்' படம் பார்க்க வந்த ரசிகர்களை, விஜய்யின் 'ஜனநாயகம்' படத்தை பார்க்குமாறு தியேட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைடர்மேன் திரைப்படத்தை காலை 11:30 மணி காட்சிக்காக செல்போன் செயலி மூலம் டிக்கெட் புக் செய்து திரையரங்கிற்கு வந்த ஏராளமான ரசிகர்கள், டிக்கெட்டில் நேரம் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாகவும், படம் இரவு 11 மணிக்குத்தான் திரையிடப்படும் என்றும் தியேட்டர் நிர்வாகம் திடீரென தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்களுக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. டிக்கெட் பணத்தைத் திரும்பக் கேட்டபோது உடனடியாகப் பணம் தர முடியாது என்று மறுத்த நிர்வாகம், அதற்குப் பதிலாக 'ஜனநாயகம்' படத்தை திரையில் பார்க்குமாறு கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாங்கள் விரும்பிய ஹாலிவுட் படத்திற்கு வந்த ரசிகர்களை, வேறு ஒரு அரசியல் படத்தைக் பார்க்கச் சொல்லி தியேட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்திய இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
Edited by Siva
