1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay jananayagan 9 days collection

9 நாட்களில் ஜன நாயகன் வசூல் இவ்வளவுதானா?

விஜய்
விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளிவந்துள்ளது  ஜன நாயகன். கடந்த 23ம் தேதி வெளியான இப்படம்  உலகளவில் கடந்த 9 நாட்களில் மொத்தம் ரூ.268.45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இத்திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் தற்போது மந்தமடைந்துள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
திரையிடப்பட்ட 9வது நாளில், நாடு முழுவதும் சுமார் 4,165 காட்சிகள் திரையிடப்பட்ட போதிலும், அன்றைய தினத்தில் வெறும் ரூ.3.55 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. வார இறுதி நாட்களுக்குப் பிறகு வேலை நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை பெருமளவில் குறைந்ததே இந்த வசூல் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
 
திரைப்படம் வெளியான முதல் சில நாட்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், 9 நாட்கள் முடிவில் இந்திய அளவில் இதன் மொத்த வசூல் ரூ.183.45 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு மற்றும் உலகளாவிய வெளியீட்டு அளவீடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த 9 நாட்கள் வசூல் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
செம வில்லன் எஸ்.ஜே.சூர்யா!. பக்கா ஆக்சன் கார்த்தி!.. சர்தார் 2 டீசர் வீடியோ!..