திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (12:14 IST)

'பேட்ட' செகண்ட் சிங்கிள் பாடலில் தில்லுமுல்லு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'மரணமாஸ்' சமீபத்தில் வெளியாகி ரஜினி, அனிருத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய இன்று இரண்டாவது சிங்கிள் பாடலான உல்லல்லா' பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை வரவேற்க ரஜினி ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த சினீக்பிக் வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'தில்லுமுல்லு' படத்தில்  அவர் பொய் சொல்லிவிட்டு புட்பால் மைதானத்தில் ஆட்டம் போட்ட காட்சியை மனதில் வைத்து இந்த பாடலை உருவாக்கியிருப்பதாகவும், முதல் பாடல் போலவே இந்த பாடலுக்கும் அனைவரின் ஆதரவு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். 

அனிருத் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை இன்னொ கெங்கா மற்றும் நாகேஷ் அஜீஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.