வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (12:22 IST)

அந்தரங்க போட்டோ விவகாரம்: பி.ஆர்.ஓவிற்கு நன்றி சொன்ன ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே இணையத்தில் வெளியான அந்தரங்க புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்தார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
 
சமீபத்தில் இவரது அந்தரங்க புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்த படம் இவர் ஒரு ஷாட் பிலிமிற்காக எடுக்கப்பட்டது என தெரிகிறது. இவரது அனுமதி இல்லாமல் யாரோ இதனை செய்துவிட்டனர். இதுகுறித்து ராதிகா ஆப்தே எந்த கருத்தையும் வெளியே சொல்லாமல் இருந்தார்.
 
இந்நிலையில் அந்த புகைப்படம் குறித்து தற்பொழுது பேசிய அவர் என் அனுமதி இல்லாமல் அந்த புகைப்படம் வெளியானது. இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் எனது பி.ஆர்.ஓ. பிரபாத் சவுத்ரி தயவு செய்த இந்த விஷயத்திற்கு ரியாக்ட் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினார். அவரின் அறிவுறுத்தலால் அமைதியானேன். யாரோ ஒருவன் செய்த தவறிற்காக நான், நாம் ரியாக்ட் செய்தால் எனது பெயர் கெட்டுவிடும் என ராதிகா ஆப்தே கூறினார்.