பட்டையை கிளப்பி வரும் 'பேட்ட', விறுவிறுப்பு இல்லாத விஸ்வாசம்

Last Modified வியாழன், 6 டிசம்பர் 2018 (22:05 IST)
வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 'பேட்ட' படத்தின் புரமோஷன் தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரண்டில் உள்ளது. ஆனால் பொங்கல் தினத்திற்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் 'விஸ்வாசம்' குறித்து எந்தவித அப்டேட்டும் இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டு மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது. இன்னும் டீசர், டிரைலர், சிங்கிள் வெளியீடு, இசை வெளியீடு குறித்த எந்த தகவலும் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை. இப்படியே போனால் விஸ்வாசம் பொங்கல் தினத்தில் வெளிவருமா? என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.


Ajith , , viswasam Poster , அஜித், விஸ்வாசம்" width="740" />
ஆனாலும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமான ஒருவர் இதுகுறித்து கூறியபோது ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படமும், ஜனவரி 14ஆம் தேதி திரைப்படமும் வெளிவரும் என்றும், விஸ்வாசம் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :