திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (15:48 IST)

விஜய் அடித்த அடிக்கு ரஜினிக்கு செக் வைக்கும் தமிழக சர்கார்கள்!

ஆளும் தரப்பினரை உசுப்பேத்தி விட்டு பிஸ்னஸில் கல்லா கட்டிய சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பு வைக்க மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். ஆனால் அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்க்ஷன் கொடுக்காமல் அந்த சவாலை எதிர்நோக்கி  ‘முடிஞ்சா தடுக்கட்டும் பார்க்கலாம். வளைச்சு வளைச்சு ரிலீஸ் பண்ணி வசூலை அள்ளி அவங்களுக்கே  சுடச்சுட பொங்கல் கொடுக்குறோம்!’ என்று கெத்தாக சவால் விட்டு சென்றுகொண்டிருக்கிறது சன் பிச்சர் நிறுவனம்.


 
சென்ற  தீபாவளிக்கு அன்று போட்டிகள் ஏதுமின்றி சிங்கிள் சிங்கமாக ரிலீஸாகியது நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படம். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான அந்த படம் ஆளும் கட்சியின் அராஜகத்தை கிழி கிழியென கிழித்திருந்ததோடு, தமிழக அரசின் இலவச திட்டங்களை நெருப்பில் தூக்கி போட்டு எரியும் காட்சிகளை இடம்பெறச்செய்தனர். இதனால் கோபம் கொண்டு பொங்கிய ஆளுங்கட்சி வட்டாரம் அந்தப் படத்துக்கு எதிராக சாட்டை சுழற்ற துவங்கியது. 
 
அந்த காட்சிகளை நீக்கியே  தீரவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆடியது ஆளும்  கட்சி. ஆனால்  அதற்குள் லட்சம் பேர் படத்தை பார்த்துவிட்டனர். டெலிட் பண்றோமுன்னு நம்மகிட்ட சொல்லிட்டு, வாட்ஸ் அப் வழியே கசிய விட்டுடாங்க.’ என்று துள்ளினார்கள் ஆளும் கட்சியின்  அதிகார மையங்கள். 



 
ஆளும் கட்சியை அலறவிட்டு  சர்கார் படத்தை தயாரித்த  கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்தான்  தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "பேட்ட" படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
 
"பேட்ட" படத்துக்கு சைலண்டாக  அதே நேரத்தின் மிக ஷார்ப்பாக ஆப்பு வைக்கும் முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியிருக்கிறது! என்கிறார்கள். காரணம்?  தி.மு.க. தலைமை குடும்ப உறுப்பினரான கலாநிதி, தங்களை வேண்டுமென்றே சர்கார் படம் மூலம் அசிங்கப்படுத்தி வம்பிழுத்துவிட்டார்! என்று அவர் மீது கோபத்தில் இருக்கும் ஆளும்  தரப்பு அவரது அடுத்த படமான இந்த பேட்ட படத்தின் பிஸ்னஸை அடிச்சு துவம்சம் செய்ய குறி வைத்து காத்திருக்கின்றனர். 


 
பிஸ்னஸ்ல கை வச்சாத்தான் கம்முன்னு அடங்குவாங்க. மற்றபடி என்ன பண்ணினாலும் திமிறத்தான் செய்வாங்க. அதனால பேட்ட படத்துக்கு ஹைடெக் தியேட்டர்கள் கிடைக்க விடாம பார்த்துக்கணும்என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார்கள் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள்.
 
ஆனால்  இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஆளும் கட்சியினரின்  அதிரடி பிளானை பக்காவாக ஸ்மெல் செய்துவிட்ட மூவ் ஆன் ஆகிவிட்டது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.


 
இருப்பினும் இந்த விவகாரத்தை தயாரிப்பு தரப்பே ரஜினியின் கவனத்துக்கு கொண்டு போக, ’வர்றோம்! நிக்குறோம்!’ என்றாராம். ஆக "பேட்ட" பொங்கல் மாஸ் ஆக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.