'தில்லுக்கு துட்டு 2' படத்தின் அசத்தலான பர்ஸ்ட் சிங்கிள் பாடல்

Last Updated: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:57 IST)
நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்ற சந்தானம் தற்போது கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மவனே யாரு கிட்ட' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை கானா வினோத் மற்றும் ஷபீர் எழுதியிருக்க ஷபீர், கானா வினோத் மற்றும் யாமினி பாடியுள்ளனர். இந்த பாடலை ஷமீர் கம்போஸ் செய்துள்ளார்.


'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்தானம், ஷரிதா ஷிவதாஸ், ராஜேந்திரன், பிபின், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். தீபக்குமார் ஒளிப்பதிவில் ஷபீர் இசையில் செஞ்சி மாதவன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


இதில் மேலும் படிக்கவும் :