சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (13:30 IST)
காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக களமிறங்கி சக்க போடு போடு ராஜா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடுத்தார்.பிறகு மீண்டும் இவர் நடித்த காமெடி ஹாரர் திரைப்படமான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் கடந்த 2016-ல் வெளியாகி வெற்றிநடைபோட்டது.
அதனை தொடர்ந்து, இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார்.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும்  இதன் டீசர் வரும் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் சினிமா நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, கிருஷ்ணா உள்ளிட்டோர் சந்தானத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :