செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (14:08 IST)

சந்தானத்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கிறார்.
‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
 
அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தை சர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன்  தயாரிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான  மாஸ்ட்ரம், த பர்பெக்ட் கேர்ள், லவ் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அத்துடன் முக்கிய வேடத்தில்  நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர் 'பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் மற்றும் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகலாம் என தெரிகிறது.