வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (15:42 IST)

'தில்லுக்கு துட்டு 2' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நம்பர் ஒன் காமெடி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் சந்தானம், திடீரென ஹீரோவாகி காமெடி வேடங்களில் நடிக்க மறுத்தார். இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வந்தது. மேலும் சந்தானம் நடித்த முடித்துள்ள மூன்று படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது.

அவ்வாறு முடங்கியுள்ள படங்களில் ஒன்றுதான் 'தில்லுக்கு துட்டு 2'. 'தில்லுக்கு துட்டு' முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்தில் நடித்த சந்தானம் இந்த படம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளார்.

இந்த நிலையில் இந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள சந்தானம், அதன் புரமோஷனை தொடங்கியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலை நாளை அதாவது ஜனவரி 12ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

சந்தனம், தீப்தி, ஷிரிதா ஷிவாஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்