வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (15:11 IST)

‘எங்க தியேட்டருக்கு கூல் சுரேஷ் வர்றார்’… ரசிகர்களை ஈர்க்க இது புது ஐடியாவா?

சமீபகாலமாக நடிகர் கூல் சுரேஷ் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்த்து மிகை உணர்ச்சியோடு திரைப்படங்களை விமர்சனம் செய்வது வைரல் ஆகி வருகிறது.

தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி பேசி பிரபலமானார் கூல் சுரேஷ். பல திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று மிகை உணர்ச்சியோடு அவர் பேசுவது ரசிகர்களுக்கு வேடிக்கையாக அமைந்தது. மேலும் கூல் சுரேஷ் பணம் வாங்கிக் கொண்டு படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று கருத்துகளும் எழுந்தன.

இதனால் இப்போது வரும் படங்களை அவர் விமர்சனம் செய்து வீடியோவாக போடுவது ஒரு சடங்கு போலவே ஆகிவிட்டது. இந்நிலையில் இப்போது இதைவைத்து தியேட்டர் உரிமையாளர்கள் கல்லா கட்ட முடிவு செய்துள்ளனர். சென்னையின் பிரபல திரையரங்கம் சில யுட்யூப் சேனல்களுக்கு “எங்கள் திரையரங்குக்கு கூல் சுரேஷ் திரைப்படம் பார்க்க இந்த தேதியில் வருகிறார்” என சொல்லி பப்ளிக் ரிவ்யூ எடுக்க வர சொல்லி குறுஞ்செய்து அனுப்புகிறார்களாம்.