திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:49 IST)

95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே? எம்பி தாகூர் விடியோ வெளியீடு

Manickam Tagore
மிஸ்டர் நட்டா 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேட்டு,  விருது நகர் காங்கிரஸ் எம்.பி, மாணிக்கம் தாகூர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து,  எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

இந்த நிலையில், நேற்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு  ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமான மாற்ற ரூ.550 கோடி  மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

தமிழக பாஜக தன் டுவிட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன.

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும்  நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்..! என்று தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில்,  பாஜக தலைவர் ஜேபி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், எய்ம்ஸ் கட்டுமான இடத்தைப் பார்வையிட்ட  மதுரை எம்பி சு.வெங்கடேஷ் மற்றும் விருது நகர் எம்பி தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே ?    நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு  வீடியோ வெளியிட்டுள்ளனர்.