1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (18:39 IST)

ரஜினியின் ‘அண்ணாத்த’: ரிலீஸ் தேதியுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சற்றுமுன் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி அட்டகாசமாக உள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ஒருமுறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி விருந்து உறுதி என்பது தெரிய வந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது