வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (16:29 IST)

என்ன இமான் பேரக் காணோம்… அண்ணாத்த போஸ்டரால் குழம்பிய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்தது. நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சற்றுமுன் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி அட்டகாசமாக உள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த போஸ்டரில் இசையமைப்பாளர் இமானின் பெயரோ அல்லது புகைப்படமோ இடம் பெறாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளன. இது ரசிகர்களின் பல்வேறு யூகங்களுக்கு இடம்கொடுத்துள்ளது.