வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:32 IST)

4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ’தி ஷேப் ஆப் வாட்டர்’

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமான அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற  திரைப்படம் 13 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு 4 விருதுகளை வென்றுள்ளது.
 
இந்த படத்திற்காக, சிறந்த இயக்குனர் விருதை- கியார்மோ டெல் டோரோ பெற்றார், சிறந்த கலை இயக்குனர் விருதை- பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகிய மூவரும் பெற்றனர். அதேபோல், சிறந்த இசையமைப்பாளர்கான விருதை- அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் பெற்றார், மேலும், இப்படம் சிறந்த படத்திற்கான விருதையும் தட்டிச் சென்றது.