திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:31 IST)

ஆஸ்கார் விழாவில் ஸ்ரீதேவிக்கு கிடைத்த பெருமை

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமான அரங்கில் நடைபெற்று வருகிறது. சிறந்த விருதுகள் பெற்ற கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இந்த விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாக விழாவில் அறிவிக்கப்பட்டவுடன் விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களும் எழுந்து நின்று ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். ஒரு இந்திய நடிகைக்கு அதிலும் ஒரு தமிழ் நடிகைக்கு இந்த மரியாதை ஒரு பெரும் பெருமையாக கருதப்படுகிறது.

ஸ்ரீதேவி ஆங்கில படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' உள்பட பல திரைப்படங்கள் வெளிநாட்டில் நல்ல வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.