1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (17:05 IST)

மேக்கிங் ஆஃப் பொன்னியின் செல்வன்’ வீடியோ வெளியிட்ட லைகா!

ponniyin
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோ சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் விக்ரம் தனது கரிகால்சோழன் கேரக்டருக்கு டப்பிங் பேசும் காட்சிகள் உள்ளன
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருக்கும் புலி திரைப்படத்திலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.