விஜய்சேதுபதி-சூரி இணையும் புதிய பட ஷுட்டிங் இனிதே ஆரம்பம்

VM| Last Modified செவ்வாய், 5 மார்ச் 2019 (11:14 IST)
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடிக்கும் படத்தின் ஷுட்டிங் இன்று இனிதே ஆரம்பம் ஆனது. விஜயா புரொடக்சன் நிறுவனம் புரொடக்சன் நம்பர் 6 என்ற பெயரில் ஆரம்பிக்கும்  இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். 


 
காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார்.  இதுதவிர க்கிய நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
 
இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.


 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. விஜய்சேதுபதி, சூரி இருவரும் கேக் வெட்டி ஊட்டி விட்டனர். அதன்பிறகு பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :