விஜய்சேதுபதியின் படம் குறித்து முக்கிய அப்டேட்!

VM| Last Modified சனி, 2 மார்ச் 2019 (17:30 IST)
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். 


 
காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார்.  இதுதவிர க்கிய நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
 
இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 4-ந் தேதி ஹைதராபாத்தில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :