போனைக் கேட்ட ஐசிசி ; கொடுக்கமறுத்த ஜெயசூர்யா – 2 ஆண்டுத் தடை !

Last Modified புதன், 27 பிப்ரவரி 2019 (11:42 IST)
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மீதான ஊழல் குற்றச்சாட்டுப் புகாரில் இரண்டாண்டுத் தடை விதித்துள்ளது ஐசிசி.

இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜெயசூர்யா மீது ஊழல் தொடர்பானப் புகார்கள் எழ ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். விசாரணையின் ஒருப் பகுதியாக அவரது செல்போனை ஒப்படைக்கும்படிக் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஜெயசூர்யா மறுத்துள்ளார்.

ஐசிசி ஊழல தடுப்புப் பிரிவின் சட்டத்தின் படி எந்தவொரு வீரர் அல்லது பயிற்சியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சந்தேகம் அல்லது புகார் எழும் பட்சத்தில் அவரது தொலைபேசி அழைப்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள் ஆகியவற்றை ஐசிசி கேட்டால் உடனடியாகக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் ஐசிசி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆகவே அந்த பிரிவுக்ளின் கீழ் ஜெயசூர்யாவைக் குற்றம் சாட்டி அவருக்கு இப்போது 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஜெயசூர்யா ’ ஐசிசி கேட்ட அனைத்துத் தகவல்களையும் நான் அளித்தேன். என் மீது எந்த வித ஊழல் குற்றச்சாட்டுகளோ, உள்தகவலைப் பரிமாறியதாகவோ என்  மீது எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லை. குற்றச்சாட்டுகளை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்றால் கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையைக் காக்கவே.  நான் எப்போதும் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

முன்னாள் நட்சத்திர வீரர் ஒருவர் ஐசிசி யால் தடை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பெரிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தடையால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் சம்மந்தமாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடமுடியாது.


இதில் மேலும் படிக்கவும் :