செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:15 IST)

தலைவர் கனவு நிறைவேறியது.! ரஜினி உடனான சந்திப்பு குறித்து புகழ் நெகிழ்ச்சி.!!

Pugazh
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த நடிகர் புகழ், தலைவர் கனவு நிறைவேறியது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சின்னதிரையில் குக் வித் கோமாளி உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் புகழ்.  இவர் 'அயோத்தி, சபாபதி, வாய்மை, யானை' உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதன் பின்னர் தற்போது 'மிஸ்டர் ஜு கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் புகழ் சந்தித்து ஆசி பெற்றார்.  அப்போது ரஜினிகாந்துடன், நடிகர் புகழ் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

 
அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, தலைவர் கனவு நிறைவுறியது என நடிகர் புகழ் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.