வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:41 IST)

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்,  சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
 
இந்த டீசரில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேட்டையனை பற்றி, அமிதாப்பச்சன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதும், அதற்கு காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் காட்சிகளும் உள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, ‘வேட்டையன்’ தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்யும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன.  மொத்தத்தில், இந்த டீசர் ‘வேட்டையன்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த டீசரில் இடம் பெற்றுள்ள சில முக்கிய வசனங்கள்:
 
 
"இந்த நாட்டில் லட்சக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது, இவரை மட்டும் அடையாளம் தெரிகிறது. எப்படி இது?" 
 
"என்கவுண்டர் என்ற பெயரில் கொலை பண்ணும்போது தான், ஹீரோயிசமா? 
 
"என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல; இனிமேல் இது மாதிரி குற்றம் நடக்கக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை"
 
Edited by Mahendran