1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:54 IST)

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

Udayanithi
துணை முதலமைச்சர் குறித்த அறிவிப்புக்கான முழு உரிமை தமிழக முதல்வரிடம் தான் இருக்கிறது என்றும் ரஜினிகாந்த் சார் பாவம் என்றும் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, இன்று காலை யூடியூப்பை பார்த்தபோது நானே பயந்துவிட்டேன் என்று தெரிவித்தார். 'உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம்' அப்படின்னு தலைப்பு இருந்தது என்றும் துணை முதலமைச்சர் குறித்த அறிவிப்புக்கான முழு உரிமையும் தமிழக முதல்வரிடம் தான் இருக்கிறது என்றும் உதயநிதி கூறினார்.
 
ஆனால் ரோட்டில் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் மைக்கை நீட்டி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? உங்களுடைய ஒப்பினியன் என்ன என கேட்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். ரஜினிகாந்த் சார் பாவம். படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு செல்கிறார்.

அவரை வழிமறித்து மைக்கை நீட்டி கேட்கிறார்கள் என்றும்   என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று அவரே சொல்லிவிட்டு போய்விட்டார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.