வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:11 IST)

சிம்பு பட நடிகையை வேகமாக இழுத்துச் சென்ற கணவர்! ரசிகர்கள் விமர்சனம்

sana khan
நடிகை சானாகான் கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது கணவர் இவரை  இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில், சிம்பு நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் சிலம்பாட்டம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்தவர் நடிகை சானாகான்.

இவர், தம்பிக்கு எந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு , தலைவன்,. அயோக்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மக்களிடையே பிரபலமானார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து அவர்  சினிமா  நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை, இந்த நிலையில்,  அவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ர சானாகானை அவரது கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்ப்பிணிப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்லலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு நடிகை சானாகான் தன் சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். எங்கள் கார் ஓட்டுனரை எங்களால் அழைக்க முடியவில்லை; எனக்கு வியர்த்துக் கொட்டியதால், அங்கிருந்து என்னை அழைத்துச் செல்லவே கணவர் அப்படி நடந்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார்.