வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:42 IST)

உலகின் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சூப்பர் ஸ்டார் முதலிடம்

sharukhan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில்  முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் பிரசித்தி பெற்ற   டைம் இதழ் ஆண்டுதோறும்,  உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களைக் கொண்ட பட்டியல் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தங்களது வாசர்களிடம்  நடத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவில், 2023 ஆம் ஆண்டிற்கான செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில், உலகக் கோப்பை வென்ற அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, 12 கோடிக்கும் அதிமான வாக்குகளில் 4% வாக்குகள் பெற்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.  இப்பட்டியலில், மெஸ்ஸி, மைக்கே யோ, இளவசசர் ஹாரி, மார்க் ஜூகன்பெர்க், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் உலகம் முழுய்வதும் ரூ.1000 கோடி வசூலீட்டி சாதனை படைத்துள்ள  நிலையில், அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானின் ஜவான் படம் விரைவில் வெளியாகவுள்ளது.