1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (13:47 IST)

பிரபல டிவி தொகுப்பாளி மாரடைப்பால் மரணம்

மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான துர்கா மேனன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
 
தொகுப்பாளினி துர்கா மேனன்(35). அவர் லூபஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
 
21 நாட்களாக அவருக்கு செய்றகை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு அவரின் சொந்த ஊரான கொடுங்கல்லூரில் இன்று நடக்கிறது. 
 
துர்கா மேனனுக்கு வினோத் என்ற கணவரும், கவ்ரிநாத் என்ற மகனும் உள்ளார். லவ் அன்ட் லாஸ்ட் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் துர்கா மேனன்.
 
காதல், உறவுகளில் உள்ள சிக்கல் குறித்து பேசப்பட்ட முதல் மலையாள டிவி நிகழ்ச்சி லவ் அன்ட் லாஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அவர் கிரண் டிவியில் லவ் அன்ட் லவ் ஒன்லி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். அவரின் மரண செய்தி அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.