அஜித் நடித்த விடாமுயற்சி 100 கோடி வசூல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!
அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு மாஸ் காட்சிகள் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் படத்தின் கதை அம்சம் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், இந்த படத்தின் முதல் நாள் வசூல் நன்றாக இருந்தாலும், அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் நல்ல வசூல் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த படம் இந்தியாவில் 72 கோடி மற்றும் வெளிநாடுகளில் 30 கோடி, மொத்தம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாட கூடிய வகையில் இந்த படம் இல்லை என்றாலும், நேர்கொண்ட பார்வை போன்ற, அஜித்தின் நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு படம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva