1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (12:56 IST)

2.0 அக்ஷயகுமாரின் புதிய மிரட்டலான போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் இணைந்து நடிக்கும் 2.0 படம் நவம்பர் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 
 
தமிழ், தெலுங்கு, இந்தியில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். 
 
லைகா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 
 
தற்போது ஆடியோ வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இது தொடர்பாக படத்தின் சவுண்ட் இன்ஜினியர்  ரசூல் பூக்குட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
அதில் இந்தியாவில் முதல் முறையாக #SRL4D  ஆடியோ தொழில்நுட்பம்  2.0 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  படத்தின் முதல் பாதிக்கு ஆடியோ பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் லைகா நிறுவனம் 2.0 படத்தில் தினசரி ஏதாவது ஒருபுகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில்  அக்ஷயகுமாரின் மிரட்டலான புதிய தோற்றம் வெளியாகி உள்ளது.