1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (12:46 IST)

ரீஎன்ட்ரியாகும் நமீதாவின் 'அகம்பாவம்'

நயன்தாரா அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் வந்தவர் தான் நமீதா,  கவர்ச்சி புயலாக வந்து ரசிகர்களை கிறங்கடித்தார். விஜய், அஜித், சரத்குமார், உள்பட பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்த நமீதா, சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேநேரம் சின்னத்திரையில் அவர் கவனம் செலுத்தி வந்தார்.
 
இந்நிலையில் அகம்பாவம் படம் மூலம் மீண்டும் நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.  வராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநயாகியாக நமீதா நடிக்கிறார். வில்லனாக வாராகி நடிக்கிறார். அகம்பாவம் படத்தை ஸ்ரீமகேஷ் இயக்குகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.