கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு சூர்யா குடும்பத்தினர் செய்த உதவி

Last Modified திங்கள், 19 நவம்பர் 2018 (13:26 IST)
நடிகர் சூர்யா விவசாயிகள் மீது அலாதி பிரியம் வைத்துள்ளார். 
 
அதை நிரூபிக்கும் வகையில் கடைக்குட்டி சிங்கம் படம் ஹிட் ஆனதும், அந்த லாபத்தில் விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்தார்.
 
தற்போது கஜா புயலால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்காக பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
 
இந்த புயலால் பல விவசாய நிலங்கள், மரங்கள், ஆடு, மாடு அனைத்தும் அழிந்து விட்டது. அதில் இருந்து மீள முடியாமல் விவசாய மக்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் சூர்யா தன் குடும்பத்தினர் சார்பாக ரூ 50 லட்சத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக கொடுத்துள்ளார். இதனால் விவசாயிகள் கண்ணீர் மாலா நன்றி தெரிவித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :