புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (12:38 IST)

"ஹேய் நீ வாய் மூடு" மீராவிடம் எகிறிய நாட்டாமை - தகராறில் முடிந்த பஞ்சாயத்து!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுக்க ஒரே இழுவையாக சென்றதால் பார்வையாளர்கள் மிகுந்த வெறுப்புக்குள்ளாகினர். இதனை புரிந்துகொண்ட பிக்பாஸ் புதுவிதமான டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றனர். 


 
அந்தவகையில் இன்று வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் கிராமத்து  வேடமிட்டு அதற்கேற்றாற்போல் டாஸ்க்களை கொடுத்து வருகின்றனர். சற்றுமுன் வெளியவந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் நாட்டாமை சேரன், பஞ்சாயத்தை கூட்டி தீர்ப்பு சொல்ல அமர்ந்திருக்கும் நேரத்தில் தேவையில்லாமல் மீராவுடன் வாய்விட்டு சண்டையிடுகிறார். 
 
இதனால் கடுப்பான மீரா "கேளு தாயி நான் கத்தி கத்தி பேசுறேனா? என குறிசொல்லும் பெண்ணான மதுமிதாவிடம் சொல்கிறார். இதெல்லாம் பார்க்க ஃபன் பண்ற மாதிரி எனக்கு தெரியலை என மீரா கூற உடனே சேரன் தயவு செய்து என்னுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாதீங்க என்று கூறி கத்தி அதட்டுகிறார். 
 
கடைசியாக பஞ்சாயத்து சண்டையில் போய் முடிய, நாட்டாமை சேரன் கோபித்து கொண்டு சென்றுவிட்டார். இந்த நாட்டாமைக்கு  தீர்ப்பு வழங்க பெரிய நாட்டாமையான கமல் வந்ததால் தான் சரிப்பட்டு வரும்.