செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (16:45 IST)

பிக்பாஸ் வெற்றியாளரை கணித்த பிரபல இயக்குநர்

100 நாட்களை கொண்ட பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்கள் நிறைவடைய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், யார் வெற்றியாளர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என்பதனை பத்திரிக்கையில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. நம்மை  நாமே உணரவைத்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இது. இதில் பெண்களின் கவர்ச்சி உடை தான்பெண் சுதந்திரம் என்று சொன்னாலும்  கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆபத்து தான் என்பதை நாம் உணரவேண்டும். கலந்துகொண்டவர்களில் ஓவியா, வையாபுரி, சக்தி என  மூன்று பேரையும் எனக்கு பிடிக்கும்.
 
ஓவியாவுக்கு சில நேரங்களில் சிநேகன் மிகுந்த ஆறுதலாகவும், கவனிப்பாகவும் இருந்திருக்கிறார் என்பதை மறக்க முடியாது.  ஓவியா போன்ற பெண்ணை பார்ப்பது கடினம். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு கவித்துவமான காவியம். கடுமையான  போட்டிக்கு நடுவில் சமூகத்தில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களில் யார் வெற்றி பெறப்போகிறார் என நானும் பொறுத்திருந்து  பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.