1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (21:49 IST)

''ஆதிபுரூஸ்'' படத்தின் வெற்றிக்காக பிரபல நடிகர் எடுத்த முடிவு....

ADIPURUSH
ஆதிபுரூஸ் படத்தின் வெற்றிக்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், விரைவில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படம் பற்றி பிரபாஸ் கூறியதாவது: ஆதிபுரூஸ் படத்தை சினிமா என்று கூறக்கூடாது. இது ரமாயணம் இப்படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இப்படம் வெளியிடப்படும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்காக காலியாக விட போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபீர்  ஒரு, ஆதிபுரூஸ் படத்தின் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், தெலுங்கானாவில், அரசுப் பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆதிபுரூஸ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க இருப்பதாக ஏற்கனவே ‘’தி காஷ்மீர் பைல்ஸ்’’ பட தயாரிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.