1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (23:01 IST)

விஜய்67 பட அப்டேட் கொடுத்த பிரபலம்...அதை டெலிட் செய்ததால் ரசிகர்கள் குழப்பம்!

விஜய்67 படத்தின் அட்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர் அதை டெலிட் செய்து, ரசிகர்களிடம் மன்னிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் விஜய்67.

இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் இப்படமும் ஒன்று.

விஜய்யின் அதிரடி ஆக்சன் படமாக இது இருக்கும் என கூறப்படும் நிலையில், இன்று விஜய்67 படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளதாக  நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இதனால், விஜய் ரசிகர்கள் குஷி அடைந்தனர். ஆனால், சில மணி நேரத்தில் அந்த டுவீட்டை அவரே டெலிட் செய்து, இதற்காக ரசிகர்களிடம் இதற்கா என்னை மன்னியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 நாளை முதல் விஜய் இப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.