திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:04 IST)

விக்ரம் -2 படத்தில் கமலுக்கு பிரபல நடிகர் வில்லன்! லோகேஷ் கனகராஜ் திட்டம்!

விக்ரம் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக பிரபல நடிகரை நடிக்கை வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில், நடிகர் கமல் தயாரித்து  நடித்த படம் விக்ரம். இவருடன் இணைந்து,விஜய்சேதுபதில், பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

இப்படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்துள்ளது. இந்த நிலலையில்,  இப்படத்தைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் இப்படத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில், விஜ67 படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதால் லோகேஷ் கனகராஜ்  நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.
Mansoor Alikhan

இப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம் 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் எனக் கூறப்படும்  நிலையில், இப்படத்தில் அவருக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகிறது.

இவர் ஏற்கனவே, கேப்டன் பிரபாகரன்ம் பிஸ்தா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.