விக்ரம் படத்தை முதல் நாளே பார்த்த நடிகர் விஜய்...லோகேஷிடம் என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில், நடிகர் கமல் தயாரித்து நடித்த படம் விக்ரம். இவருடன் இணைந்து,விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
இப்படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இப்படம் பற்றி லோகேஷ் தெரிவித்துள்ளதாவது: விக்ரம் படத்தை முதல் நாளே பார்த்த நடிகர் விஜய், மைன்ட் ப்ளாயிங் என்று சொன்னதாக தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் 2 முறை விக்ரம் படத்தைப் பார்த்து தன்னைப் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், விஜய்67 படத்தில் முழு கவனம் செலுத்த உள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக கூறிய லோகேஷ் இப்படத்திற்கு நட்சடத்திரங்களை தேர்வு செய்து வருகிறார்.