ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:37 IST)

தமிழ்சினிமாவின் வரம், இயக்குநர் அண்ணன் பாலா -சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம்,  இயக்குநர் அண்ணன்  பாலா அவர்கள் என்று பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. சேது, பிதாமகன், தாரைதப்பட்டை, பரதேசி ஆகிய படங்களுக்கு அடுத்து பாலா இயக்கி வரும் படம்  வணங்கான்.

இந்த படத்திற்கான முதல்கட்ட ஷூட்டிங் கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. ஆனால் திடீரென இந்த படப்பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறுவதாகவும், ஆனால் படம் வேறு நடிகர்களை வைத்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும், மறு கையில் விநாயகர் சிலையையும் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து, தமிழ் சினிமா பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’இங்கு காலத்தை வெல்வது முக்கியம். நம் முன்னே எத்தனை சமர் வரினும் நின்று எதிர்கொண்டு இன்று தனக்கென படைப்பாற்றலில் மிகச் சிறந்த இடத்தை தக்க வைத்திருக்கும் நம் தமிழ்சினிமாவின் வரம்,  இயக்குநர் அண்ணன்  பாலா அவர்கள்.

அவரது இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன.

அதேபோல இன்று #வணங்கான் படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருன்விஜய்க்கு இது மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்.

இனி உங்கள் கோணத்திற்கே விட்டுவிடுகிறேன். ’’என்று தெரிவித்துள்ளார்.