வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (14:56 IST)

தமிழ் சினிமாவின் 125 படங்கள் ரிலீஸாகாமல் உள்ளன- விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர் நடிப்பில்,  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, விஜய் ஆண்டனி, நிழல்கள் ரவி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது. இப்படம் பிகாக்பஸ்டர் ஹிட்டாகி ரூ.100 கோடி வசூலித்துள்ளாதாக விஷால் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  தமிழ் சினிமாவின் 125 படங்கள் ரிலீஸாகாமல் உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’தற்போது படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது கஷ்டமாக உள்ளன. எனவே ரூ.1 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரையிலான செலவில் படம் எடுக்கும் எண்ணத்தில் யாரும் வர வேண்டம்’’ என அறிவுறுத்தியுள்ளார்.