வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (19:34 IST)

''வணங்கான் ''படத்தின் புதிய அப்டேட்

Vanangaan
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா. இவர் சேது, பிதாமகன், தாரைதப்பட்டை, பரதேசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில்  சூர்யா  நடிக்கவிருந்த  நிலையில் விலகினார. இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில்

இப்படத்தில் சமுத்திரகனி மற்றும் மிஷ்கின் வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில்,  நாளை மறுதினம் (25 ஆம் தேதி)  காலை 10 மணிக்கு  பாலாவின் வணங்கான் பட முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.