திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (16:43 IST)

அர்னால்டுக்கு பின்னனி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் காலமானார்!

vijayakumar
தமிழ் சினிமாவில் பின்னணி குரல் கலைஞராக வலம் வந்த விஜயகுமார் இன்று காலமானார்.

சினிமாவில்  நடிப்பு, இசை, ஒளிப்பதிவு,  பின்னணி குரல் உள்ளிட்ட பலதுறைகள் இருக்கும் நிலையில், இத்துறையில் பணியாற்றி வருகின்றன் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால்தான் ஒரு திரைப்படம் உருவாகி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹாலிவுட்டில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் அர்னால்ட் மற்றும் சில்வர்ஸ்டார் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவரும், பும்பா, பென்10 உள்ளிட்ட கார்டூன் கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவருமான விஜயகுமார் இன்று காலாமானார்.  அவருக்கு வயது 70 ஆகும்.

அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.