வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (13:30 IST)

மீண்டும் உங்களுடன் பணிபுரிய ஆவல்...ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல் வாழ்த்து

kamal,rahman
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் 1992 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய ரோஜா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தேசிய விருதை வென்றார்.

அதன்பின்னர், ஜெண்டில்மேன், தில்ஷே, ஜீன்ஸ், ராவணன், எந்திரன், 2.0, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி, பல பாடல்கள் மற்றும் படங்களின் பின்னணி இசையை ஹிட் செய்துள்ளார்.

ஸ்லம்டாக் மில்லியனார் என்ற படத்தின் இசையமைப்பிற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று சாதித்தார்.

இந்த நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் 57 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து கமல்ஹாசன், ரஹ்மான் ஜி இனிய  பிறந்த நாள் வாழ்த்துகள்…  மீண்டும் உங்களுடன் பணிபுரியவும், உங்களின் சிறந்த இசைக்காகவும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருவரும் இணைந்து இந்தியன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி நிலையில் மணிரத்னம் இயக்கி கமல் நடித்து வரும் தக்லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

துள்ளல் இசையாலும் - தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்,