புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:37 IST)

4 மொழிகளில் உருவாகும் வரலட்சுமி நடிக்கும் தத்வமசி- போஸ்டர் வெளியீடு!

நடிகை வரலட்சுமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் தத்வமசி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகையாக இருந்தாலும் முதலில் அவர் மேல் எந்த கவனமும் விழவில்லை. கடைசியில் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் நான்கு மொழிகளில் உருவாகும் தத்வமசி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை ரமணா கோபிசெட்டி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்துக்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படம் ஆக்‌ஷன் அட்வெண்ட்ச்சராக உருவாக உள்ளது.