1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:22 IST)

டி 20 உலகக்கோப்பை… இந்தியாவுக்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்- பாகிஸ்தான் கேப்டன்!

அக்டோபர் மாதம் தொடங்கும் டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும்
பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை டி 20 தொடரில் நேருக்கு நேர் மோத உள்ளன.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் காரணமாக இரு நாட்டு தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொள்கின்றன. இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் ‘இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட பல படிகள் மேல் உள்ளது. அதனால் பாகிஸ்தானுக்குதான் அழுத்தம் அதிகம். ஏற்கனவே 5 முறை இந்தியா வென்றுள்ளது. ஆனால் டி 20 போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாபர் ஆசாம் இதுபற்றி பேசுகையில் ‘எங்களை விட இந்தியாவுக்கு அதிக அழுத்தம் இருக்கும். ஏனென்றால் அவர்கள் சமீபமாக எந்த டி 20 போட்டியிலும் விளையாடவில்லை. டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில்தான் விளையாடுகிறார்கள். அதே போல அமீரகத்தில் நாங்கள் 10 ஆண்டுகளாக விளையாடி வருவதால் அது எங்களுக்கு சொந்த நாட்டு மைதானம் போன்றது எனக் கூறியுள்ளார்.