திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (11:55 IST)

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனின் உருக்கமான முதல் பதிவு!

தர்ஷன் நேற்று பிக்பாஸில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தர்ஷன் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் ரசிகர்கள் பலரும் விஜய் டிவிக்கு எதிராக #RedLightChannelVijayTV என்ற ஹேஷ் டேகை ரெண்ட் செய்து வந்தனர். 


 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார் அதில்" நமக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து அன்பை பெறுவது ஒரு நல்ல உணர்வு தான். அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் மீது வைத்துள்ள அன்பையும் ஆதரவையும் நான் உணர்ந்துள்ளேன். இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. நான் பிக்பாஸிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி. இது தான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு . உங்களை விரைவில் சந்திக்கிறேன்" என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து அவருக்கு ஆறுதலான சில வார்த்தைகளை கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Love you all ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on