புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (11:22 IST)

என் காதலை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் - கண்ணீர் விட்டு கதறிய தர்ஷன் காதலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே வனிதாவுக்கு ஷெரினுக்கும் இடையில் சண்டை வலுத்து வருகிறது. ஷெரின் தர்ஷனுடன் நெருங்கி பழகி வருவதை கண்ட வனிதா, அவனுக்கு வெளியில் ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருக்க இது என்ன கள்ள தொடர்பு என்று கூறி அவர்களின் உறவை மிகவும் கொச்சைப்படுத்தி பேசினார். 


 
இதனால் கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டார். மேலும், இனிமேல் நான் தர்ஷனிடன் பேசவே மாட்டேன். அவன் இருக்கும் பக்கம் கூட போகமாட்டேன் என்று கூறி கதறி அழுதார். இனி உனக்கும் எனக்கும்  உள்ள நட்பு கிடையாது என்று சொல்லிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தை எண்ணி தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்" என்னால் தான் தர்ஷனின் வெற்றி வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆதலால் தர்ஷனின் முன்னேற்றத்திற்கு நான் எந்த விதத்திலும் தடையாக இருக்க விரும்பவில்லை என்று கூறி நான் இத்துடன் விலகிக்கொள்கிறேன் என கண்ணீர் மல்க பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.