ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (07:45 IST)

தர்ஷன் வெளியேறியபோது கண்ணீர் விட்ட ஆடியன்ஸ்: பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத புதுமை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸ்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்களில் தர்ஷனும் ஒருவர் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அவர் வெளியேறுவது யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது
 
 
தர்ஷன் இதனை எளிதாக எடுத்துக் கொண்டாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் இதனை நம்பவே முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் நேற்று கமல்ஹாசனிடம் பேசுவதற்காக அரங்கிற்கு வந்தார். அப்போது பலத்த கைதட்டல் உடன் தர்ஷனை வரவேற்ற ஆடியன்ஸ் ’தர்ஷன் தர்ஷன்’ என்று கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி ஒருசில பெண்கள் தர்ஷனின் வெளியேற்றத்தை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்ததும் தனக்கு இவ்வளவு அன்பு வெளியில் இருக்கின்றதா என்பதை பார்த்து தர்ஷன் நெகிழ்ந்து விட்டார் 
 
 
பிக்பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் வெளியேறும்போது இந்த அளவிற்கு வரவேற்பு கொடுத்து கோஷமிட்டு கண்ணீர் விட்டு அழுவது என்பது இல்லாத ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ள ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது 
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதி உள்ள நால்வரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் மக்களின் மனதை வென்றவர்ட் தர்ஷன் மட்டுமே. இதனை சாண்டி உள்பட நான்கு போட்டியாளர்களும் நேற்று கமல்ஹாசனிடம் பேசும்போது தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது