1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2019 (12:09 IST)

தர்ஷன் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் தர்ஷன் தனக்கு அழகான காதலி இருப்பதாக ஆரம்பத்தில் கூறியிருந்தார். பின்னர் அவர் யார் என்பதை அலசி ஆராந்து ரசிகர்கள் தேடியபோது அவரே அடிக்கடி இணையதள சேனல்களில் நிறைய பேட்டி கொடுத்திருந்தார்.      


 
மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி,  ஷெரின் தர்ஷனிடம் நெருங்கி பழகி வந்ததை திட்டி நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அப்போது அவருக்கு தர்ஷனை எவ்வளவு பிடித்திருக்கிறது எனபதும் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவின் நெருக்கத்தையும் மக்கள் கண்டறிந்தனர். 
 
இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது  தர்ஷனின் குடும்பத்தார் வாழ்த்து கூறிய வீடியோவும் நிகழ்ச்சியில் ஒளிபரப்படட்டது. மேலும் ஒரு வாழ்த்து அட்டை தர்ஷனுக்கு அனுப்பப்பட்டது. அதில் தர்ஷனின் நண்பர்கள் அனைவரும் அவருக்கு அந்த அட்டையில் வாழ்த்துக்களை எழுதியிருந்தனர். 

அப்போது ஷெரின், இந்த வாழ்த்து அட்டையை யார் என்று கேட்க, அதற்கு தர்ஷன் இது சனம் ஷெட்டி அனுப்பியது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் அந்த அட்டையை கேமரா முன் காண்பித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தர்ஷன். மேலும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் தர்ஷனுக்கு வாழ்த்து கூறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Birthday Tharshan